250 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை ஜனவரி இறுதி (அ) பிப்ரவரிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2013

250 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை ஜனவரி இறுதி (அ) பிப்ரவரிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்தவர்களுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.இவ்வகையில், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, முதல்வர் அனுமதி வழங்கி விட்டதாக, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.எனவே, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி