540 பல்கலை.யில் இரட்டை பட்டப்படிப்பு : பெரியார் பல்கலை. துணைவேந்தர் தகவல - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2013

540 பல்கலை.யில் இரட்டை பட்டப்படிப்பு : பெரியார் பல்கலை. துணைவேந்தர் தகவல

வரும் கல்வியாண்டு முதல் இந்தியாவில் 540 பல்கலை.களில் இரட்டை பட்டப் படிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துசெழியன் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாஸ் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துசெரூ.யன் நிருபர்களிடம் கூறியதாவது:
பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையுடன் இரட்டை பட்டப் படிப்பு திட்டம் வரும் கல்விஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் ஒரே கல்வி ஆண்டில் தங்களுக்கு பிடித்த 2 இளங்கலை அல்லது ஒரு இளங்கலை, ஒரு பட்டயம் அல்லது ஒரு இளங்கலை, ஒரு முதுகலை என எப்படி வேண்டுமானாலும் விருப்பப்படி இரட்டை படிப்புகளை படிக்கலாம். இந்தியாவில் உள்ள 540 பல்கலை. களில்வரும் கல்வி ஆண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் படிப்பு முடித்த ஆண்டிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை, தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலத்தில் பேசும், எழுதும் திறமை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் தமிழக அரசு மாணவர்களுக்கு சுயவேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த ஒவ்வொரு பல்கலை.க்கும் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி