பிப்ரவரி மாத CRC தோராய பட்டியல் படி (09.02.2013) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால் தோராய பட்டியல் தேதிகள் உறுதியானது இல்லை, மாற்றங்களுக்கு உரியது. ஆசிரியர்கள் தம் பல்வேறு செயல்பாடுகளை திட்டமிடுவதற்கு இந்த CRC தேதிகள் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால் , நம் தலைப்பின் கேள்வி தான் தற்போது ஆசிரியர் மத்தியில் அதிகம் கேட்கப்படுகிறது. சென்ற வாரம் நடைபெறாததால்இந்த வாரம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஓங்கி இருக்கிறது. அதற்கான விடை ,இந்த வாரமும் (16.02.2013) CRC இல்லை. ஆனால் அடுத்த மாதம் தான் CRC என்றும் , இனி இவ்வருடத்தில் CRCயே இல்லை என்ற இரு கருத்துகள் அதிகம் பரப்படுகிறது. எனினும் இவ்விரு கருத்துக்களின் நம்பகத்தன்மையை இதுவரை அறியமுடியவில்லை. எனவே இயக்ககத்தின் மூலம் தெரிவிக்கப்படும் தகவலைக்கொண்டே உறுதியான தேதியை/ நிலையை அறியமுடியும். அத்தேதி நம் தளத்தில் உடன் தெரிவிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி