எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின்சென்னை மண்டல துணை இயக்குனர் ஆர்.கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ளது. இந்த தேர்வை முதல் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில்கலந்துகொண்ட பள்ளிக்கூடத்திலேயே செய்முறைத்தேர்வில் பங்கேற்கவேண்டும். செய்முறைத்தேர்வு 20–ந் தேதி தொடங்கி 28–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் (சனிக்கிழமை உள்பட) காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபெறும்.செய்முறைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரியிடம் 18 முதல்20–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான ரெக்கார்டு நோட்டை தவறாறு தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். செய்முறைத்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி தெரிந்துகொள்ளலாம். செய்முறைத்தேர்வு குறித்து தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது.போட்டோவுடன் கூடிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் பின்னர் தனியே வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே தியரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு கீதா கூறியுள்ளார்.
Feb 16, 2013
Home
STUDENT
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி