அரசு ஊழியர்களுக்கான புதிய தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி விகிதம் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2013

அரசு ஊழியர்களுக்கான புதிய தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி விகிதம் அதிகரிப்பு.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது.  அதாவது, அந்தாண்டிற்கு பின் சேர்ந்தவர்கள் அனைவரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகையை அரசும் வழங்கி, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி