சம்பளத்தில் குளறுபடி; ஆசிரியர்கள் கண்ணீர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2013

சம்பளத்தில் குளறுபடி; ஆசிரியர்கள் கண்ணீர்.

திருப்பூரில், சம்பளம் வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், இரு மாதங்களுக்கு முன், பணி நியமனம் செய்யப்பட்டு, பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். திருப்பூர் தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் புதிதாக பணிபுரியும் 54 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., பள்ளிகளில் பணியாற்றும் 100 ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம், பிப். 1ம் தேதி வங்கியில்செலுத்தப்பட்டுள்ளது; பிப்., 4ம் தேதி, அவர்களுக்கு மீண்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குரிய சம்பளம், இருமுறை வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பின், அவர்களுக்கு இரண்டாம் முறை தவறுதலாக வழங்கப்பட்ட சம்பளம், திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் உள்ளிட்டவைகளுக்காக, கூடுதலாக பணம் எடுக்கப்பட்டுள்ளது; ஒரே மாதத்தில் இருமுறை சம்பளம் "கிரெடிட்'ஆனதுடன், வருமான வரி செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும் என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.சம்பள வினியோகத்தில் இதுபோன்ற குளறுபடி தொடராமல் தடுக்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி