பிளஸ் 2 அரசு தேர்வு பறக்கும் படைகளை புறக்கணிப்போம் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர்"அதிரடி'யாக முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள்ஆரம்பமாகிறது. இதனையொட்டி பிராக்டிக்கல் தேர்வுகள் கடந்த 4ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடக்கிறது. வரும் 18ம் தேதிக்குள்பிராக்டிக்கல் தேர்வுகளை முடிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்வு மையங்களில் தேர்வுகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.பறக்கும் படையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் உழைப்பூதியமாக 100 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை இப்பணியில் ஈடுபட்டனர். இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படையினருக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறைகோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சூழ்நிலையில் வரும் பிளஸ் 2 தேர்வுக்கு முன்பாக பறக்கும்படையினருக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு பறக்கும் படை பணிகளை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுசம்பந்தமாக நெல்லையில் நேற்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தானை சந்தித்து, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் ஜோஸ்வா கிறிஸ்டோபர், நெல்லை கல்வி மாவட்ட தலைவர் ஆசீர் சார்லஸ் நீல் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி