முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும் - மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2013

முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும் - மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி

முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.  சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்:ம.ம.க., திரு.ஜவாஹிருல்லா:சிறுபான்மை கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்தும், நிரப்பப்படாமல் உள்ளது.மாண்புமிகுஅமைச்சர்திரு.பழனியப்பன்:சிறுபான்மையினர் கல்லூரிகளில், 3,120 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அப்பணியிடங்கள் எந்த வகைகளில் காலியானவை என்பது குறித்து, மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் அந்த கல்லூரிகள், சிறுபான்மை தகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜவாஹிருல்லா: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 21 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆனால், உருது, தெலுங்கு, மலையாளம் வழி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, தேர்வு பெற்றவர்களுக்கு இன்னும் நியமன உத்தரவு அளிக்கப்படவில்லை.மாண்புமிகு.அமைச்சர்திரு.சிவபதி:சிறுபான்மை மொழி ஆசிரியர்களை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட, 69 தெலுங்கு, 21 கன்னடம், 24 உருது மற்றும் ஐந்து மலையாளம் என, 119 இடைநிலை ஆசிரியர்கள், 70 தெலுங்கு, 20 மலையாளம், ஒன்பது உருது மற்றும் மூன்று கன்னடம் என, 102 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள், 20 பேருக்கான பட்டியல், அடுத்த மூன்று தினங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி