பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேர்வு துறை அனுப்பிய சுற்றறிக்கை: கணித வினாத்தாளில் ஒரு மார்க் பகுதியில், 15 வினாக்கள் கேட்கப்படும். இதில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வினாக்களில் இருந்து 10ம், யோசித்து பதில் எழுதுமாறு 5 கேள்விகளும் இருந்தது. இது மாற்றப்பட்டு, 15 வினாக்களும் புத்தகத்தில் உள்ள கேள்விகளேகேட்கப்படும்.கட்டாயம் விடையளிக்கும், 2 மார்க் பகுதியில் 30வது கேள்வியும், 5 மார்க் பகுதியில் 45வது கேள்வியும் மாணவர்கள் கடினமான பகுதியாக நினைக்கும் இயற்கணிதம், எண் தொடர், அளவீடுகள் ( 2, 3, 5 மற்றும் 8வது பாடங்கள்) பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 பாடங்களிலும் இருந்தும், யோசித்து எழுதாத வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.இரண்டு மார்க் மற்றும் 5 மார்க் பகுதியில் தலா 2 கேள்விகள்யோசித்து விடையளிக்கும் வகையில் இருக்கும். இந்தாண்டு முதல் இந்த முறை தவிர்த்து, புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகள் இடம் பெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்றாண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு, யோசித்து விடையளிக்கும் எழுதும் வகையில் அதிக வினாக்கள் இடம்பெற்றதே காரணம். இதனால், அவ்வகையான வினாக்களை சில பகுதியில் மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில்"நூற்றுக்கு நூறு" மதிப்பெண்களை மாணவர்கள் அள்ளுவார்கள், என எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி