10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2013

10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு: அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வில் பங்கேற்க முடியும். பழைய பாடத்திட்டத்தில், அறிவியல் பாடத்தை தவிர, இதர பாடங்களில் தோல்வியுற்று இருந்தால், அந்த பாடங்களை மட்டும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம்.தேர்வுக் கட்டணம், 125 ரூபாய், சிறப்புக் கட்டணம், 500ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும்.www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், 5, 6ம்தேதிகளில், மாணவர் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை, 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பின், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய படிவத்தில் வழங்கப்படும், 10 இலக்க எண்களை, மாணவர், தவறாமல் குறித்து கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தியே, தேர்வு தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களுக்கும், முறையீடு செய்ய முடியும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், மாணவ, மாணவியர், தங்களின் புகைப்படத்தை ஒட்டி, அருகில் உள்ள அரசு பள்ளி தலைமைஆசிரியரிடம், சான்றொப்பம் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை, வரும் 18, 19ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் ஒப்படைத்து, ஹால் டிக்கெட் பெறலாம்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி