செய்முறை வகுப்புக்கு விண்ணப்பிக்க தவறிய, பத்தாம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்கள், உடனடி தேர்வு எழுத, ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இரண்டு ஆண்டுகளாக, சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், அறிவியல் பாடத்திற்கு, செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வாக எழுதுவோரும், செய்முறை தேர்வுக்கான வகுப்புக்கு விண்ணப்பித்து, அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள், தனித் தேர்வு அடிப்படையில், அறிவியல் செய்முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களில் பலர், செய்முறை வகுப்புக்கு விண்ணப்பிக்க தவறி விட்டனர். இதையடுத்து, "வரும் மார்ச் 27ல் துவங்கும், பொதுத்தேர்வில் இவர்கள் அறிவியல் தேர்வு எழுத முடியாது" என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்முறை வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்கள், அடுத்து நடைபெற உள்ள தட்கல் திட்டம் அல்லது ஜூனில் நடைபெற உள்ள உடனடித் தேர்வுக்கு, விண்ணப்பிக்க கேட்ட போது, அதிகாரிகள், "அறிவியல் தேர்வு, மார்ச் மாதம் எழுத முடியாதோர், இந்த ஆண்டு, ஜூன் மற்றும் செப்டம்பரில் நடைபெறும் தேர்வை எழுத முடியாது" என, தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டே தேர்வு எழுத அனுமதித்தால், தேர்ச்சி பெற்று, இதே ஆண்டில், பிளஸ்1 வகுப்பில் சேர முடியும். இந்த ஆண்டு மார்ச்சில் அறிவியல் தேர்வு எழுதாதோர், அடுத்த ஆண்டு மார்ச்மாதம் தான் தேர்வு எழுத முடியும் என, அதிகாரிகள்
கூறியதால், ஆயிரக்கணக்கானோர், ஓராண்டை வீணாக்க வேண்டி உள்ளது.
அரசு, மீண்டும் செய்முறை வகுப்பு நடத்தி, அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி