சத்துணவுக்காக 6 ஆண்டுகளாகத் தவிக்கும் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2013

சத்துணவுக்காக 6 ஆண்டுகளாகத் தவிக்கும் மாணவர்கள்


வால்பாறை அருகே சத்துணவு கிடைக்காமல், செட்டில்மெண்ட் மாணவர்கள் ஆறு ஆண்டுகளாக தவம் கிடக்கின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகத்தில் கவர்க்கல் (குடி) செட்டில்மெண்ட் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் இது அமைந்துள்ளதால், காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு, ஆதிவாசி மக்களை அச்சுறுத்தி வந்தன.

இதனால், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள், செட்டில்மெண்டை காலிசெய்து விட்டு, கடந்த 2011ல் எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் குடிபெயர்ந்தனர். இந்த செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக, தமிழக அரசின் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பத்து குழந்தைகள் படித்து வந்த இப்பள்ளியில், தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து, பாடம் நடத்தி விட்டு போகிறார். ஆனால் பள்ளி திறந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இது வரை மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி ஆதிவாசிகள் கூறுகையில், "காட்டுயானைக்கு பயந்து 16 குடும்பங்கள் வேறு இடத்தில் குடிபெயர்ந்துள்ளோம். ஆனால் வனத்துறை சார்பில் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. நாங்களே வீடு கட்டி, அதில் ஒரு அறையை பள்ளிக்காக ஒதுக்கியுள்ளோம். அருகில் உள்ள எஸ்டேட்டுகளில் கூலி வேலை செய்து வருகிறோம்" என்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலத்திடம் கேட்ட போது, "வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த செட்டில்மெண்ட் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் ஒப்புதல் பெற்ற பின்னர், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி