பிளஸ் 2: பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்து 29 கேள்விகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2013

பிளஸ் 2: பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்து 29 கேள்விகள்.

பிளஸ் 2 பொதுத் தேர்வின் தமிழ் முதல் தாளில் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட 29 கேள்விகள் மீண்டும் இந்தாண்டும் கேட்கப்பட்டன.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அப்போது கேள்வித் தாளை பெற்ற பல மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட 29 கேள்விகள், இந்தாண்டும் திரும்பவும் கேட்கப்பட்டதுதான் காரணம்.தமிழ் முதல் தாள் கேள்விகள் மொத்தம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு மதிப்பெண் முதல் பத்து மதிப்பெண் வரையிலான கேள்விகளாக மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்காக கேள்வித் தாள் தயாரிக்கும்போது கடந்தாண்டு கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மீண்டும் கேட்கப்படும்.ஆனால் இந்தாண்டு மொத்தம் 50 கேள்விகளில் 29 கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம்நூறு மதிப்பெண் கொண்ட கேள்வித் தாளில் 63 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.29 கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டு இருந்தாலும் கேள்வித் தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகவில்லை என்ற காரணத்தால் மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி