பண்ருட்டி, அண்ணா கிராமம் ஒன்றியங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். பண்ருட்டி, அண்ணா கிராமம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஒவ்வொரு மாதமும் மாதஊதியம் சம்பந்தப்பட்ட கருவூலம் மூலம் சரிபார்க்கப்பட்ட அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நடப்பு நிதி ஆண்டிற்கான வருமானவரி ஆவணங்கள் பண்ருட்டி கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு காரணங்களால் பிப்ரவரி 2013க்கான ஊதியம் இன்னும் பெறமுடியவில்லை. தினந்தோறும் வங்கியில் சென்று தமது ஊதியம் வந்துள்ளதா என பார்த்தபோது வரவில்லையென தெரிந்ததால் ஏமாற்றமடைந்து சென்றனர். சாப்ட்வேர் பிரச்னையால் தற்போது புதிய சாப்ட்வேர்கள் ஏற்றப்பட்டதால் ரிசர்வ் வங்கி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து வங்கிகளும் ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிய வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி