தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு நடந்து வருகின்றன. மார்ச் 27ம் தேதி கடைசி தேர்வாக நர்சிங், புள்ளியல் மற்றும் தொழிற்கல்விக்கான "தியரி" தேர்வுகள் நடக்கின்றன. ஆனால், அதே தேதியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வும் நடக்கின்றது. இதனால், ஒருசில சிறிய மேல்நிலை பள்ளிகளில், இரு தேர்வுகளுக்கும் மையங்கள் ஒதுக்க, போதிய இடவசதி இல்லை.இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இரு தேர்வுகளுக்கும், குறைந்தபட்சம் ஒரு நாளாவது இடைவெளி விட்டிருக்கலாம். சமூக அறிவியல், நர்சிங், புள்ளியியல் தேர்வுகளை குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே எழுதுகின்றனர். இதனால், 70 சதவீதம் தேர்வு மையங்களில் பிரச்னை வராது.ஆனால், 30 சதவீதம் தேர்வு மையங்களில், இருப்பிட அளவை விட, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மையங்களில் எவ்வகையான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை, என்றனர்.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. பல மையங்களில் இப்பிரச்னை ஏற்படாது.அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அருகே உள்ள பெரிய மையங்களில், கூடுதல் மாணவர்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி