10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2013

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், அறிவியல் பாடத் தேர்வில் செய்முறை அமல்படுத்தியதோடு, வினாத் தாள்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது.பாடப் புத்தகத்தில் இருப்பதை, அப்படியே கேட்காமல்,"கிரியேட்டிவிடி"யை அதிகரிக்கும் வகையில், பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதிலும், கணிதப் பாடத்தில், 12 மதிப்பெண்களுக்கு, இந்த வகையிலான கேள்விகளுக்கு, கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், கடந்த ஆண்டு, 100 சதவிகித மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது.இந்நிலையில், நடப்பாண்டில் கணித விடைத்தாளில் மாற்றம் வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வ சுற்றறிக்கை வராத காரணத்தால், அவை உண்மையா அல்லது, கடந்த ஆண்டு போலவே, வினாத்தாள் வந்து விடுமோ என்ற பயம், மாணவர்களிடையே எழுந்தது.தற்போது, அனைத்து பள்ளிகளுக்கும், இம்மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் கணிதப்பாடம், "ஏ" பிரிவில் கேட்கப்படும், ஒரு மதிப்பெண் வினாக்கள் 15ம், புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே, கேட்கப்படும்."பி" பகுதியான இரு மதிப்பெண் வினாவில், "கிரியேட்டிவ்" வினாவாகவும், கட்டாய வினாவாகவும் இருந்த, 30வது வினா, நடப்பாண்டில் புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல், 29 வரை உள்ள, இரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்" வினாவாக கேட்கப்படும்.இதே போல், பிரிவு, "சி" யில் கட்டாய வினாவாகவும், கிரியேட்டிவ் வினாவாகவும் இருந்த, 45 வது வினா, தற்போது புத்தகத்தில் உள்ள வினாவாக கேட்கப்படும். இதற்கு பதில் வினா எண், 31 முதல், 44 வரை உள்ள வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்" வினாவாக கேட்கப்படும்.அதே போல், கடந்த ஆண்டில், மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே,"கிரியேட்டிவ்" வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.தற்போது அனைத்து பாடங்களில் இருந்தும், "கிரியேட்டிவ்" வினாக்கள் கேட்கப்படும் என்பது உள்ளிட்ட ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது கட்டாய வினாக்களில், "கிரியேட்டிவ்" வினாக்கள் இல்லாததால், புத்தகத்தில் உள்ள வினாக்களை கொண்டே, 100 சதவிகித மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி