தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கமாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இக்கூட்டதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2012& 13ம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணத்தை பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன் கருதி வரும் 30ம் தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பள்ளி மாணவர்களைப்பற்றிய விவரங்களை ஆன் லைன் முறையில் பதிவு செய்ய, 10 பள்ளிகளுக்கு ஒரு தகவல் சேகரிப்பு மையத்தை (நோடல் சென்டர்) அமைக்க வேண்டும். மாணவர்களை புத்தக சுமையைக்குறைக்க முப்பருவ கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.வரும் கல்வியாண்டில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறைநடைமுறைக்கு வர உள்ளது. அதே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரம் உள்ளன. இவற்றை கண்காணிக்க கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Mar 19, 2013
Home
SCHOOL
30ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை.
30ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி