உதவி பொறியாளர் தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2013

உதவி பொறியாளர் தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு.

பொதுப் பணித்துறையில், 154 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பொதுப்பணித்துறை, எலெக்ட்ரிக்கல் பிரிவில், 28 பணியிடங்கள்; ஊரக வளர்ச்சித் துறை, சிவில் பிரிவில், 18 இடங்கள்; தொழிற்சாலை உதவி ஆய்வாளர் பதவியில், 13 இடங்கள் உட்பட, 223 பணியிடங்களுக்கு, நேற்று தேர்வுகள் நடந்தன. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னையில், 18 ஆயிரம் பேர் எழுதினர்.மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடந்தது. இதன் பின், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இரண்டிலும், தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி