தமிழக சிறைகளில் இருந்து தேர்வுகளில் பங்கேற்றவர்களில், 5 பேர்தங்கப் பதக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2013

தமிழக சிறைகளில் இருந்து தேர்வுகளில் பங்கேற்றவர்களில், 5 பேர்தங்கப் பதக்கம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில், தமிழக சிறைகளில் இருந்து பங்கேற்றவர்களில், 5 பேர் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி வாயிலாக பல்வேறு பட்டயப் படிப்புகளுக்காக, தேர்வு எழுதிய 185 பேரில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் உள்ள அருளானந்தம் சமையற் கலையிலும், வீரபாரதி நான்கு சக்கர வாகன பராமரிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.வேலூர் மத்திய சிறையில் இருக்கும் அ.ஞா. பேரறிவாளன், பவானி சிங்ஆகியோர் DTP பட்டயப் படிப்பிலும், கடலூர் மத்தியச் சிறையைச்சேர்ந்த கன்னியப்பன் D.H.E. என்ற படிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளதாக சிறைத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி, தமிழகத்தின் 9 மத்திய சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு துறைகளில் தொழிற் பயிற்சியை அளித்து வருதாக குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி