தமிழகத்தில் டைப்ரைட்டிங் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2013

தமிழகத்தில் டைப்ரைட்டிங் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பம

டைப்ரைட்டிங் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (15ம் தேதி) ஆரம்பமாகிறது.தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் கடந்த மாதம் 9ம் தேதி சுருக்கெழுத்து தமிழ் ஹை ஸ்பீடு தேர்வுகளும், 10ம் தேதி ஆங்கில ஹை ஸ்பீடு தேர்வுகளும், கடந்த 16ம் தேதி குறிப்பிட்ட மையங்களில் சுருக்கெழுத்து தமிழ் ஜூனியர், சீனியர் பிரிவு தேர்வுகளும், கடந்த 17ம் தேதி ஆங்கிலம் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர் பிரிவு தேர்வுகளும், கடந்த 18ம் தேதிஅக்கவுன்டன்சி தேர்வுகளும் நடந்தது.கடந்த 23ம் தேதி டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு தேர்வுகளும், 24ம் தேதி 5ம் பேட்ஜ் ஜூனியர் பிரிவு, டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் சீனியர் பிரிவு தேர்வுகளும், தமிழ், ஆங்கிலம் ஹைஸ்பீடு தேர்வுகளும் நடந்தது.இத்தேர்வுகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தின் குறிப்பிட்ட மையங்களில் டைப்ரைட்டிங் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிஇன்று (15ம் தேதி) ஆரம்பமாகிறது. தொடர்ந்து நாளை (17ம் தேதி) வரை இப்பணிகள் நடக்கிறது. பின்னர் இத்தேர்வு முடிவுகளை வெளியிட தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உரிய நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பிரிவு தேர்வுக்கு டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் சீனியர் பிரிவு அவசியம் என்பதால் இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும், இப்பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வும் அவசியம் என்பதால் இக்கல்விக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி