600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் - தேர்வுத் துறை அவசர உத்தரவ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2013

600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் - தேர்வுத் துறை அவசர உத்தரவ

பிளஸ்   2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ மாண வியரும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.              இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 2020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தேர்வு துறை அறிவித்தபடி தபாலில் வருவது தாமதமாகியுள்ளது. குறிப்பாக சில மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தபால் நிலையங்களுக்கு இரவு நேரத்தில்தான் எடுத்து செல்கின்றனர். இதனால் அந்த கட்டுகள் தேர்வு துறைக்கு வந்து சேர்வதில் தாமதமாகி விடுகிறது.               இதையடுத்து 600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை நேற்று அவசர உத்தரவு போட்டுள்ளது. இன்றும் நாளையும் தேர்வு இல்லை என்பதால் இரண்டு நாளில் தேர்வு மையத்தை பிரித்து அந்த தகவல்களை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய நிலைக்கு மாவ ட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி