கடந்த ஆண்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலந்தாய்வின்போது, அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, பல்வேறு குளறுபடி நடந்தது. அதனால், எருமப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளியில்,கூடுதல் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், 15 யூனியன்கள் உள்ளன. அவற்றில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.ஆசிரியர்கள் விருப்ப இடமாறுதல் கேட்கும் பள்ளியில், ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தால், அவற்றுக்கும் இடமாறுதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்துக்கு உட்பட்ட எருமப்பட்டி யூனியனில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அதன்படி, எருமப்பட்டி யூனியனில் மொத்தம், 52 பள்ளிகள் உள்ளன. அதில், 35 தொடக்கப் பள்ளி, பத்து நடுநிலைப்பள்ளி, ஆறு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் ஒரு ஆதி திராவிடர் நலப் பள்ளியும் அடக்கம்.அவற்றில், மொத்தம், 121 இடைநிலை ஆசிரியர், 29 பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒரு சில பள்ளிகளில், கூடுதலான ஆசிரியர்களும் பணிபுரிந்தனர். கூடுதலாக பணிபுரியும் ஆசிரியர்களை, அதே யூனியனில் காலியாக இருந்த பள்ளிகளுக்கு, கலந்தாய்வின் போது, இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.ஆனால், கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்வின்போது, இதுபோன்ற நடவடிக்கை எதுவும், எருமப்பட்டி யூனியனில் பின்பற்றப்படவில்லை.மாறாக, காலியாக இருந்த ஆசிரியப் பணியிடங்களுக்கு, புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.அதனால், எருமப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பள்ளிகளில், ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தைக் காட்டிலும், கூடுதலாக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இக்குளறுபடிக்கு, மாவட்ட தொடக்க மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே முழுக் காரணம்.கலந்தாய்வின் போது, காலிப்பணியிடம் போல், உபரி ஆசிரியர் எண்ணிக்கையும் வெளிப்படையாக அறிவித்திருந்தால், இப்பிரச்னை எழுந்திருக்காது. இப்பிரச்னை, எருமப்பட்டி யூனியனில் மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள பல்வேறு யூனியன் பள்ளிகளிலும் உள்ளது எனவும், புகார் தெரிவிக்கப்படுகிறது.எருமப்பட்டி யூனியன் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஆசிரியப் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கலந்தாய்வின் போது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் இருந்தால், அவர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் யூனியனில் உள்ள காலிப் பணியிடம் இருந்தால், அந்த பள்ளிகளுக்கும், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். இதுபோன்ற நடைமுறை எதுவும், எருமப்பட்டி யூனியனில் கடைபிடிக்கப்படவில்லை. இந்த யூனியனில் உள்ள ஏழு ஆசிரியப் பணியிடம் காலியாக இருந்தது. தவிர, பள்ளிகளில் கூடுதலாகவும் ஆசிரியர்கள் பணிபுரிந்தனர்.அந்த ஆசிரியர்களை காலிப் பணியிடத்தில் நிரப்பாமல், புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதிகாரிகள் செய்த குளறுபடியால், நாமக்கல் மாவட்டத்தில், எருமப்பட்டி யூனியனில் மட்டும் உபரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி