தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். அமைப்பாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பாலகுருநாதன், தமிழாசிரியர் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, ஆங்கில மொழியாசிரியர் கழக பொதுச் செயலாளர் ஆரோக்கியதாஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் குமரேசன் உட்பட பலர் பேசினர்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியருக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வட்டார பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி