எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின்விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை, திருத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூலியும் வழங்கப்படுகிறது. மாணவர்களின், எத்தகைய பதில்களுக்கு, எவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது, "ஆன்சர் - கீ" முறைப்படி, மதிப்பெண் வழங்கப்படுகிறது.சில நேரங்களில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. உதாரணமாக, மதிப்பெண்ணை கூட்டுவதில் தவறு, மதிப்பெண் அளிக்க மறந்து விடுவது, தவறுதலாகஅதிக மதிப்பெண் போட்டு விடுவது போன்ற தவறுகளை ஆசிரியர்களும் செய்வதுண்டு.அத்தகைய தவறுகளுக்கு, ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யும் வகையில், ஒவ்வொரு தப்புக்கும், ஒவ்வொரு விதமான தண்டனை, அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சம், 15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு, எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்படும்.15 மதிப்பெண் முதல், 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு, அதிகபட்சம், 1,000 ரூபாய் அபராதமும், கண்டன நோட்டீசும் அளிக்கப்படும்.மொத்தம், 30 மதிப்பெண் முதல், 50 மதிப்பெண் வரை வித்தியாசம் இருப்பின், அந்த ஆசிரியரின் பணிப்பதிவேடுகளில், அவரின் தவறான செயல் குறிப்பிடப்படும். அதற்கும் மேல் தவறு செய்தால், ஆசிரியருக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.இவ்வாறு, ஒவ்வொரு படியாக தண்டனை மற்றும் அபராத அட்டவணையை, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி