"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள், நேர்மையாக நடக்கும்; இதுகுறித்து, யாரும் பயப்பட வேண்டாம்" என, தேர்வாணையத்தின் புதிய தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.தமிழக அரசின், அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்த நவநீதகிருஷ்ணன்,தேர்வாணையத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம், தலைவர் பதவியில் இருந்து, நட்ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை, 10:30 மணிக்கு, தேர்வாணையத்தின் புதிய தலைவராக, நவநீதகிருஷ்ணன் பதவி ஏற்றார்.இவரது தந்தை அப்பாசாமி, தாயார் இந்திராணி ஆகியோர், மகனை ஆசிர்வாதம் செய்து, தலைவர் நாற்காலியில் அமர வைத்தனர். பின், நவநீதகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:எனக்கு, இந்தப் பதவியை வழங்கிய, முதல்வருக்கு, முதலில் நன்றி. டி.என்.பி.எஸ்.சி., பழமையான, பாரம்பரியம்மிக்க ஒரு அமைப்பு. இது,மிக சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும், சிறப்பாக செயல்பட, நான் பாடுபடுவேன்.புதிய முன்னேற்றங்களுக்கு, வழிவகை செய்யப்படும். தகுதியானவர்கள், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். அனைத்து தேர்வுகளும், நேர்மையாக நடக்கும்; இது குறித்து, யாரும்பயப்பட வேண்டாம். தேர்வாணையத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி, நிர்வாகம் சிறப்பாக செயல்பட, நடவடிக்கை எடுப்பேன்.அரசுத் துறைகளில், காலியாக உள்ள இடங்களைப் பெற்று, உடனுக்குடன் தேர்வை நடத்தி, முடிவுகளை வெளியிடவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி