தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் பழனிராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது : நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் நியமனம் செய்வதில் குளறுபடி நடந்துள்ளது. சீனியாரிட்டி இல்லாத ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையிட்டபோது சீனியாரிட்டியை கடைபிடிப்போம் எனக்கூறிவிட்டு தற்போது மாவட்டதொடக்கக் கல்வி துறை இதனை மீறிவிட்டது. எனவே மாவட்டத் தொடக்கக்கல்வி துறை குளறுபடியை நீக்க வேண்டும் என்றனர். இப்போராட்டத்தால், நேற்று டி.இ.இ.ஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி