இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது: தீர்வு கிடைக்குமாஇலங்கைத் தமிழர்களுக்கு?! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது: தீர்வு கிடைக்குமாஇலங்கைத் தமிழர்களுக்கு?!

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவுதெரிவித்து வாக்களித்துள்ளது.25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் உள்ளபட 13நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டத்தில் 8 நாடுகள் பங்கேற்கவில்லை.முன்னதாக தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்க தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.தொடர்ந்து உலகநாடுகள் அமெரிக்க தீர்மானம் குறித்த தங்களது கருத்துக்களை முன்வைத்தன.இந்தியா கருத்து: இலங்கை உடனான உறவை துண்டிக்க முடியாது என இந்தியப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார். 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார். அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் முடிந்திருப்பதை இலங்கையில் சமஉரிமை வழங்கும் தருணமாக பார்க்கிறோம் என தெரிவித்தார். உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.சர்வதேச விசாரணை கூடாது: இலங்கை பிரதிநிதி கருத்து அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கைப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார்.  இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்தார். மறுவாழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ள புகார்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க தீர்மானம் உள்நோக்கம் கொண்டது என குற்றஞ்சாட்டினார். இலங்கை தனித்துவிடப்படுவதாகவும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும்வலியுறுத்தினார்.ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் உதவி இலங்கைக்கு அவசியம் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.பாகிஸ்தான் எதிர்ப்பு: இலங்கைக்கு எதிராக அமெிரக்க கொண்டுவந்துள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும், எதிராக ஓட்டளிக்கப் போவதாகவும் தெரிவித்தது. மேலும் அமெரிக்கத் தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகள்: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.    பாகிஸ்தான்    கியூபா    ஈகுவேடார்    வெனிசுலா    பிலிப்பின்ஸ்    இந்தோனேசியா    கத்தார்    காங்கோ    மாலத்தீவு    உகாண்டா    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்    தாய்லாந்து    மவுரிடானியா

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி