டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மீதான குற்றச்சாட்டு: ஐகோர்ட் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2013

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மீதான குற்றச்சாட்டு: ஐகோர்ட் நோட்டீஸ்


"தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மீதான புகார்கள் குறித்து, உண்மை அறிக்கை அளிக்கும்படி, தேர்வாணைய செயலரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது" என, சென்னை ஐகோர்ட்டில், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை, இம்மாதம், 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர், எம்.ராமசாமி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: தேர்வாணைய உறுப்பினராக, 2006ம் ஆண்டு மே முதல், கடந்த ஆண்டு, மே வரை, பணியாற்றியுள்ளேன். தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரியில், நடராஜ் நியமிக்கப்பட்டார். அதில் இருந்து, விதிகளுக்கு முரணாக அவர் செயல்பட துவங்கினார்.

தேர்வாணையம், கூட்டுக்குழுவாக செயல்பட வேண்டும். இந்த நடைமுறையை பரிசீலிக்காமல், அவர் முடிவெடுக்க துவங்கினார். சில பிரச்னைகளில், உறுப்பினர்களின் கருத்துக்களை புறக்கணித்து விட்டு, சொந்த கருத்துக்களை, அரசுக்கு அனுப்பினார்.

அவரது நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம் செய்வது போலாகும். அவரது முறைகேடுகள் குறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னருக்கு, கடந்த ஆண்டு, டிசம்பரில், மனு அனுப்பினேன். அந்த மனு மீது, மேற்கொண்டு நடவடிக்கைக்காக, தமிழக அரசுக்கு, கவர்னர் அலுவலகம் அனுப்பியது.

அரசு தரப்பில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகாரின் மீது, விசாரணை நடத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும். புகார் தொடர்பான ஆவணங்களை, அரசு வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி ராஜேஸ்வரன் முன், விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்வாணையத் தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, உண்மை அறிக்கையை அளிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி., செயலரிடம், அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆவணங்களும், அவர் வசம் உள்ளது" என்றார்.

இதை பதிவு செய்து கொண்டு, தேர்வாணையத் தலைவர் நடராஜ்க்கு, தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 14ம் தேதிக்கு, நீதிபதி ராஜேஸ்வரன் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி