கலையாசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2013

கலையாசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு.

தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியத்தினை உயர்த்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் மூலம் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சென்னையில் 16 வகையான கலைகள், மாவட்டங்களில் 4 வகையான கலைகள் என மொத்தம் 20 வகையான கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இந்த சவகர் மன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க கூடுதலாக 26 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை சவகர் மன்ற கலையாசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 1500 ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் மாவட்டப்பகுதிகளில் உள்ள கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.ஊரக மைய ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான ஊதியம் 150 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 34 கலையாசிரியர்கள், 4 ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டங்களில் 136 கலையாசிரியர்கள் 35 திட்ட அலுவலர்கள் என மொத்தம் 209 பேர் பயன்பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி