பள்ளி கல்வித்துறை உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கின கட்டணம் தெரியாமல் பெற்றோர் குழப்பம். பள்ளி கல்வித்துறை உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி உள்ளன.கட்டண விவரம் தெரியா மல் பெற்றோர்கள் குழம்பி வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் ஆண்டுக்காண்டு வசதி களை அரசு அதிகரித்து வந் தாலும் மெட்ரிக் உள் ளிட்ட தனியார் பள்ளிகள் மீதான மோகம்பெற்றோர் மத்தியில் குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் தனி யார் பள்ளிகளில் கூடுதலாக சேர்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.வரும் கல்வி ஆண்டில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இதற்காக தனியார் பள்ளிகளின் முழு விபரங்கள் விண்ணப்பங்களாக பெற்று ஆய்வு செய்யப்பட உள் ளன. அடுத்த மாதம் பள்ளிகளில் இறுதி தேர்வு நடக்கிறது. ஏப் ரல் 2 மற் றும் மூன் றாம் வா ரத்திற்குள் இந்த ஆண்டிற் கான கல்விப்பணிகள் நிறைவு பெறும். அதன்பிறகு கோடை விடு முறை அளிக்கப் படும். இது முடிவடைந்து வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.அடுத்த கல்வி ஆண்டிற் கான மாணவர் சேர்க் கையை வருகிற மே மாதம் தான் நடத்த வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரித்து உள்ளது.இருப்பினும் மாணவர் சேர்க்கை தொடர்பான பிற பணிகளை பெரும்பாலான தனியார் பள்ளி கள் இப்போதே தொடங்கி விட்டன.பள்ளி விபரம் குறித்த குறிப்பேடு மற்றும் சேர்க்கை விண்ணப்பங்களையும் தயாரித்துள்ளன.சில பள்ளிகளில் இந்த விண்ணப்ப விநியோகம் தொடங்கிவிட்டது.விண்ணப்ப படிவம் ரூ.100, ரூ.150 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. பெற்றோரும் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஆனால் கல்விகட்டணம் எவ்வளவு இருக்கும் எனத்தெரியாமல் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆகஸ்டில் இறுதி விவரம்கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை எந்தப்பள்ளிகளும் உறுதியாக தெரிவிக்காத நிலையில் அறிவிக்கப்படும் தொகையை மொத்தமாகவோ மூன்று அல்லது 4 தவணையாகவோ செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாககல்வி நிறுவனங்கள் பெற்றோரிடம் தெரிவித்து வருகின்றன. கல்வி கட்டணம் குறித்த இறுதி விபரம் வெளிவர வரும் ஆகஸ்டு மாதம்வரை ஆகலாம் என கூறப்படுகிறது. விண்ணப்பங்களை இப்போதே வழங்கினாலும் அரசு உத்தரவுப்படி வருகிற மே மாதம்தான் அறிவிப்பு செய்து மாணவர் சேர்க்கை தொடங்கும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
Mar 7, 2013
Home
SCHOOL
பள்ளி கல்வித்துறை உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கின கட்டணம் தெரியாமல் பெற்றோர் குழப்பம்.
பள்ளி கல்வித்துறை உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கின கட்டணம் தெரியாமல் பெற்றோர் குழப்பம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி