தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், 37 மாணவர்கள், பிட் அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.ஏற்கனவே நடந்த தமிழ் முதற்தாள் தேர்வில், ஆறு பேரும்; இரண்டாம் தாள் தேர்வில், 11 பேரும்; பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, அன்றைய தேர்வில் இருந்து நீக்கப்பட்டனர்.ஆங்கில தேர்வுகளில், முறைகேடு அதிகமாக நடப்பது வழக்கம். இதனால், பறக்கும் படை குழுவினர், ஆங்கில தேர்வுகளின் போது, தேர்வு மையங்களில், கூடுதல் கவனம் செலுத்துவர். நேற்று நடந்த,ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், மாநிலம் முழுவதும், 37 மாணவர்கள், பிட் அடித்து சிக்கினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மூவர்; தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில், தலா இருவர்; நாமக்கல், ஆறு; ஈரோடு, மூவர்; சென்னை, ஒருவர்; அரியலூர், 14; திருவண்ணாலை, கடலூர் மாட்டங்களில், தலா ஒரு மாணவர்; திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு பேர் பிடிபட்டனர்.இதுவரை, தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும், சம்பந்தபட்ட பாடங்களில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுத்துறை விசாரணைக்குப் பின், குறிப்பிட்ட பாடத்தில், அடுத்த இரு பருவங்களுக்கு, தேர்வெழுதவும் தடை விதிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி