குடும்ப ஓய்வூதியதாரர்கள் புத்தகத்தில் தங்கள் பிறந்த தேதியைதவறாக குறிப்பிட்டிருந்தால், அதை சரி செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு அளித்துள்ளது.அதன்படி, குடும்ப ஓய்வூதிய ஆணைப் புத்தகத்தில் ஓய்வூதியதாரரின் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையின் பிறந்ததேதி தவறாக இடம்பெற்றிருந்தால் உரிய ஆவணங்கள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம் என்று மத்திய பணியாளர் நலத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.பான் கார்டு, மேநிலைக் கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆகியவற்றில் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அதோடு, பிறந்த தேதியை சரி செய்வதற்கான விளக்கக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட துறைக்கு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிக்குப் பிறகு அவரது பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணைக்கு தொடர்ந்து ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி