வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2013

வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை.

டி.என்.பி.எஸ்.சி.,யில் ஆன்-லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை, 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வெளிப்படையான செயல்பாடு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., மீது, வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் பேசினார்.பாரதிதாசன் பல்கலை, 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசய்யா, விழாவிற்கு தலைமை வகித்து, முதுகலை, இளங்கலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் பயின்ற, 297 மாணவியர் உட்பட, 697 பேருக்கு பட்டம் வழங்கினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் பேசியதாவது: நம் நாட்டில், 10ம் வகுப்புக்கு மேல் கற்பதை, 1.2 கோடி பேர் நிறுத்தி விடுகின்றனர். மொத்தமுள்ள,2.89 கோடி மாணவ சமுதாயத்தில், 1.66 கோடி பேர் மட்டுமேஉயர்கல்வி பயில்கின்றனர்.தற்போதுள்ள உயர்கல்விக்கான உள்கட்டமைப்புகள், போதுமானதாக இல்லை. மொத்தம் உள்ள கல்லூரி மாணவ, மாணவியரில், 7 சதவீதம் பேர் மட்டுமே, முதுகலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலக் கூடிய வகையில், இடங்கள் உள்ளன. 25 சதவீத ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன.11வது ஐந்தாண்டு திட்டத்தில், உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை, வெறும், 15 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. ஆசிரியர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்வதில், எல்லை நிர்ணயம் செய்யக் கூடாது.டி.என்.பி.எஸ்.சி.,யில் ஆன்-லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை, 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வெளிப்படையான செயல்பாடு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., மீது வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: மனிதஇன வளர்ச்சிக்கு ஆதார தூணாகவும், மரபு வழி கல்வி முறைக்கு நல்ல துணையாகவும் இருப்பது உயர்கல்வி. தமிழகத்தில் தற்போது, 12.4 சதவீத ஆண்களும், 9.2 சதவீத பெண்களும் உயர்கல்வி பயில்கின்றனர்.இவ்வாண்டில் இதை, 25 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் படி, உறுப்பு கல்லூரிகள் துவங்குதல், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தல் போன்ற, பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.உலக தர உயர்கல்வியை அளிப்பதற்காக, 10 பல்கலைக்கு தலா, 10கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மாணவர்கள், வெளிநாடு சென்று பயிலும் திட்டத்தை செயல்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம், உயர்நிலை மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது, தேசியஅளவில், 13 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 18 சதவீதமாக இருக்க, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தான் காரணமாக உள்ளது. இவ்வாறு பழனியப்பன் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி