காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியர் பணிகளுக்கு 12 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணினி அறிவியல், விலங்குகள் நலம் மற்றும் மேலாண்மை, நிறுவனச் செயலர், உடற்கல்வி, பொது மேலாண்மை, வங்கி மேலாண்மை ஆகிய பிரிவுகளில் துணைப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதே போல தொலைதூரக் கல்வி பிரிவில், இயற்பியல், வேதியியல், மகளிர் சார் படிப்புகள், கணினி அறிவியல், ஆங்கிலம், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களுக்கு துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தை அஞ்சல் வழியில் பெற பொதுப் பிரிவினருக்கு 520 ரூபாய்க்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 320 ரூபாய்க்கும் வரைவோலை எடுக்க வேண்டும். வரைவோலையை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயரில் எடுத்து விண்ணப்பிக்கவும்.கட்டணச் சலுகையைப் பெற விரும்புவர்கள், தங்களது சாதிச் சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப வேண்டும். www.algappauniversity.ac.inஎன்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 1-ஆம் தேதிகடைசி நாள்.
Mar 14, 2013
அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர் உட்பட பல பணிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி