2013-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்குத் தயாராகும் பட்டதாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் முதன்முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த வருடம் நடத்தப்பட்டது.அந்தத் தேர்வில் காலியிடங்களையும் விடக் குறைந்த தேர்வர்களே தேர்ச்சி பெற்றனர். 6 1/2 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்தனர். எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் தகுதித் தேர்விற்கும் போட்டிகள் அதிகமுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் கல்வி - வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இந்த இலவசப் பயிற்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் நாள் பயிற்சிக்கு 250-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். சென்னை தவிர, வேறு மாவட்டங்களில் இருந்தும் பயிற்சிகள் பெற பலரும் விண்ணப்பித்துள்ளதால், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் இலவச பயிற்சி முகாம் தொடங்கப்படும் என அம்பேத்கர் கல்வி - வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து இணைந்து கொள்ளலாம் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Mar 20, 2013
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
pls auther sir,i am waiting longtime for botany trb result.most of them r preparing for TET. no one s raising question for us. pls sir ask WHEN THE TRB BOARD RELASE RESULT.PLS
ReplyDeleteBotany result eppo poduvanga sir.valkaila evvalavu periya kastatha parthathu ella.list mattum potta kooda pothum.select ah illaiya .ethuku mela ennala ..........thanga mudiyala.plse...............
ReplyDelete