அரசு பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2013

அரசு பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது.

கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் திட்டத்தில், சிவகாசி விஸ்வநத்தம் அரசுப் பள்ளி ஆசிரியர், தேசிய விருது பெற்றுள்ளார். பள்ளிப் பாடத்தை, கம்ப்யூட்டர் வழியில் கற்றுத் தருவதற்கான செயல் திட்டங்களுக்கு, தேசிய கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, செயல் திட்டங்கள் வரவேற்கப்பட்டன.அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 2,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். போட்டியை, தனியார் நிறுவனங்கள் சார்பில், மனிதவள மேம்பாட்டுத் துறை நடத்தியது.தேசிய அளவில், 20 செயல் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், சிவகாசி விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், கருணைதாசின் படைப்பு தேர்வானது.எட்டாம் வகுப்பு அறிவியல், "புவி வெப்பமயமாதல்" பாடத்தை,"அனிமேஷன்" தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்துள்ளார். இச்செயல் திட்டம், மாணவர்களை கவர்ந்தது; கவனச்சிதறல் இன்றி, மாணவர்கள் உணர்ந்தனர்."படிக்கவும், பதில் அளிக்கவும் எளிமையாக உள்ளது" என, மாணவர்கள் தெரிவித்தனர். ஆசிரியருக்கு, மத்திய அமைச்சர் சசி தரூர் விருது வழங்கினார்.விருது பெற்ற ஆசிரியர் கருணைதாசின் கூறியதாவது: மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம், எளிமையாக பாடங்களை நடத்துவதற்காக, செயல்திட்டம் தயாரித்தேன். ஒலி எப்படி உருவாகிறது; எவ்வாறு உணரப்படுகிறது; ஒலி வெற்றிடத்தில் பரவாது என்பதை எளிமையாக விளக்கி உள்ளேன்.மாணவர்களுக்கு நேரில் கற்றுத் தருவதை விட, கம்ப்யூட்டர் மூலம் கற்பித்தல் எளிமையாக புரியும்படி உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி