தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2013

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.2013-2014 ஆம் கல்வி ஆண்டில் இருந்தது புதிதாக 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அதோடு சேர்த்துமேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என இன்று அறிவித்தார்.சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்தில்அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த , 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி