பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாகசென்று கணக்கெடுக்கப்படுகிறது. இதில், கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, முறையான பயிற்சிக்கு பின், "ரெகுலர்' பள்ளியில் சேர்க்கின்றனர்.இதற்கான கணக்கெடுப்பு, வரும், 10ம் தேதி துவங்கி, ஏப், 27ம் தேதி வரை, நடக்கிறது. இப்பணியில், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு, 14 முதல் 18 வயது வரையிலான, பள்ளி செல்லா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்து, இடைநிலை கல்வி திட்டத்தில் ஒப்படைக்க உத்தர விடப்பட்டுள்ளது. முதன் முறையாக, 14 முதல் 18 வயதிலான குழந்தைகளை கணக்கெடுப்பதால், இவர்களுக்கு, உண்டு உறைவிட பள்ளி, இணைப்பு பயிற்சி மைய வசதி ஏற்படுத்தப்படும். வணிக நிறுவனங்களில், 14 வயதுக்கு மேல் பணிபுரியும் ஏராளமான, ஏழை மாணவர்கள், இத்திட்டத்தால் பயன் பெற வாய்ப்பு உள்ளது.வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த தகவலை, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், அருகில் உள்ள வட்டார வள மையத்தில் தெரிவிக்கலாம்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி