2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டுபுத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2013

2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டுபுத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 -14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி