குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2013

குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்.

வி.ஏ.ஓ., பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், நேரடி தேர்வை ரத்து செய்து, இளநிலை உதவியாளர் பணி நிலையில், "குரூப் 4” மூலம் தேர்வு செய்ய வேண்டும்” என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் மாநில கூட்டமைப்பு கருத்தரங்கு மதுரையில் நடந்தது. வி.ஏ.ஓ.,க்கள் சங்க செயலர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்."கிராம நிர்வாக இடர்பாடுகள், வருவாய் நிர்வாக சீரமைப்பு உட்பட தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வருவாய் பணியாளர் அங்கீகாரம், பதவி உயர்வு வேண்டும்; உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் போல, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஒருங்கிணைக்கப்பட்டதாக மாற்ற வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், "வருவாய்த் துறையில் நேரடி நியமனங்களை குறைத்து, இளநிலைஉதவியாளர் பணி நியமனங்களை அதிகரிக்க வேண்டும்; பட்டா, சிட்டா, ஜாதி, வருவாய்ச் சான்றிதழ்களை, பிர்க்கா அளவில் வழங்க, துணை தாசில்தார் அலுவலகங்கள் உருவாக்க வேண்டும்; 25 ஆண்டு பணிசெய்தவி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்களுக்கு, ஊக்க சம்பளம் வழங்க வேண்டும்” என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர், கணபதி, நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி