முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2013

முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.

முதுகலை தாவரவியல் ஆசிரியர், தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம்ஏற்பட்டது.இந்த பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 204 பணியிடங்களில், 195 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., தனது அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட்டது. மீதியுள்ள பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட இன சுழற்சியில், தகுதியான தேர்வர்கள் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.வழக்கமாக, எந்த ஒரு தேர்வு பட்டியலாக இருந்தாலும், உடனடியாக, www.trb.tn.nic.inஎன்ற டி.ஆர்.பி., இணையதளத்தில்வெளியிடப்படும். இம்முறை, இணையதளத்தில் வெளியிடாததால், தேர்வுமுடிவை அறிய முடியாமல், தேர்வர்கள் தவித்தனர்.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சர்வர்" பிரச்னை காரணமாக, இணையதளத்தில், தேர்வு முடிவை வெளியிட முடியவில்லை. ஓரிரு நாளில், இணையத்தில், வெளியிடப்படும் என, தெரிவித்தன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி