இடைநிலை ஆசிரியர்கள் மாநில செயற்குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2013

இடைநிலை ஆசிரியர்கள் மாநில செயற்குழு

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஈரோட்டில் நடந்த இடைநிலை ஆசிரியர்கள் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜெயராணி, மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். வரும் மே, 10ம் தேதி பள்ளி மானிய

கோரிக்கைக்கு முன், தமிழகத்தில் அரசு, உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், 2,500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணையிட வேண்டும்.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி, தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து பழைய முறையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் எனப்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் இசக்கியப்பன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில அமைப்பு செயலாளர் அருணகிரியார் நன்றி கூறினார்.

1 comment:

  1. I am Muralitharan from coimbatore .I studied 10+D T Ed +Degree + B Ed . The court judgement said 10+ D T Ed is equal to +2 .They are eligible to get B,T promotion . But education dept did not give promotion . All fedaration leaders plz note this point and pass this message to our CM and educational minister

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி