ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணிநியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவிருக்கும் இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் இலவசப் பயிற்சியை வழங்கி வருகிறது டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம்.சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தப் வகுப்புக்கு திடீரென வருகை புரிந்த ஜி. ராமகிருஷ்ணன், ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசிரியர்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு அரசியல் சட்டப்படி சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் எனவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி