தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2013

தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் மாற்றம்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கான முடிவு  நடந்த ஆணையத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் மாற்றம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காகடி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.இந்த நிலையில், நீண்ட காலமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாததாலும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஊழியர்களை தேர்வுசெய்வதற்காகவும் கடந்த மாதம் பாடத்திட்டம் அடியோடு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் தமிழ்மொழி தொடர்பான கேள்விகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘பகுத்து ஆராயும் திறன்’ (ஆப்டிடியூட்) புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக புகார் குரூப்–2 தேர்வில் தமிழ்மொழிதொடர்பான 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டு, ஆப்டிடியூட் தொடர்பாக 50 வினாக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவ–மாணவிகளும் டி.என்.பி.எஸ்.சி.யிடம்முறையிட்டனர்.இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் அவசர கூட்டம்  நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மா.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம், மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது. 17–ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருத்தப்பட்ட புதியபாடத்திட்டத்தில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 17–ந் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி