சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும்
வழங்கப்படுகிறது.இந்த விடுதியில், 2013 - 14ம் ஆண்டில் சேருவதற்கு, பிளஸ், 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதற்கான தேர்வுகள் கீழ்கண்ட விளையாட்டுகளில் நடத்தப்படும். இதன்படி, ஆண்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, தேக்வாண்டோ மற்றும் பெண்களுக்கு தடகளம், கால்பந்து மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கான, விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை (9ம் தேதிக்குள்)சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி