எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு.

"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள்; 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவை, ஆண்டுதோறும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்களை, வரும் மே, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மொத்தம், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்துவதில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.www.tnhealth.org,www.tn.gov.inஆகியஇணையதளங்களிலும், மே 9ம் தேதி முதல், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களை, குறிப்பிட்ட இணைய தளங்களில் பெறலாம்.பொறியியல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக, ஜூன் முதல் வாரத்தில், மருத்துவப் படிப்பு மாணவர்சேர்க்கைக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுகுமார் கூறினார்.285 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்?:திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, இந்த ஆண்டு துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) அனுமதி கோரப்பட்டுள்ளது.மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது குறித்து, இக்கல்லூரிகளில், சமீபத்தில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.ஆய்வு முடிவுகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக வந்தால், இந்த ஆண்டு, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி