ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்க படவுள்ளது.புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன.அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையானநடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்' கூட்டத்தில்முடிவு எடுக்கப்படும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி