தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்ததாவது:"5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 50 ஆயிரம் "இ-நோட்புக்" வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்தக சுமையிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த "இ-நோட்புக்" கில் அனைத்து பாடப் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.இந்த ஆண்டு இறுதிக்குள், கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் "வை-ஃபை" இன்டர்நெட் வசதி செய்யப்படும், இதன் மூலம் மாணவர்கள் "இ-நோட்புக்" மூலம் வகுப்பறையிலேயே இன்டர்நெட் பயன்படுத்தலாம்.இப்புதிய திட்டத்தினால் கரும்பலகை மற்றும் நோட்டுப் புத்தகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர் என அர்த்தம் இல்லை. மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தையும் பயன்படுத்தலாம், கரும்பலகையிலும் பாடங்கள் வழங்கப்படும். வீடுகளில் நடத்திய பாடங்களை திருப்பி பார்ப்பதற்கு "இ-நோட்புக்" பயன்படும்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி