100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்தரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2013

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்தரம்.

தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய தலைமையாசிரியர்கள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வுப் பட்டியலில் இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து இவரகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற்றது.அதேபோல், இந்த 100 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக இருந்தவர்கள், காலியாக இருந்த பிற உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 100 அரசு உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டது. இந்தப் பள்ளிகளில் 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் ஏற்பட்டன. முதல் கட்டமாக 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்க ஏதுவாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி