2015-ல் கல்வி அறிவு 80 சதவீதம் இலக்கு: அமைச்சர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2013

2015-ல் கல்வி அறிவு 80 சதவீதம் இலக்கு: அமைச்சர்.

வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொக‌ையில் சுமார் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் பேசியதாவது: வரும் 2015-ம் ஆண்டிற்குள் 80 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்றுவது மேலும் அடுத்த பத்தாண்டிற்குள் முழு கல்வி பெற்ற நாடாக மாறும் நிலை ஏற்படும் ‌என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2001-ம் ஆண்டு மக்கள தொகை கணக்கெடுப்பின் படி படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 20 ‌கோடியாக மட்டுமே இருந்தது. இதில் பாதி பேர் பெண்களாவர்.பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் தற்போது 70 ‌கோடி மக்கள் வாசிக்கவும்,எழுதவும் கற்று தேர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி